ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் பகுதியில் வசித்து வரும் சில இஸ்லாமிய அமைப்புகள், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், துக்தாரன் இ மில்லத் அமைப்பின் சார்பில், பாகிஸ்தான் தேசிய தினம் இன்று ஸ்ரீநகரில் கொண்டாடப்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் துக்தாரன் இ-மில்லத் அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் தலைவியாக  அசியா அன்ட்ராபி தலைமையில் பாகிஸ்தான் தேசிய தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய, அசியா அன்ட்ராபி, இந்திய  துணை கண்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பாகிஸ்தானியர்களே’ என்று கூறினார். மேலும், துணை கண்டத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் இஸ்லாமியம், இமான் (நம்பிக்கை) குரான் மற்றும்  நபிகள் நாயகம் க்கான (ஸல்) அடிப்படையில் பாகிஸ்தானியர் என்று கூறினார்.

மக்கள் தொகை மிகுந்த நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் 6வது இடத்தில் உள்ளதாக தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் பாகிஸ்தான் 2வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியின்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து  பாகிஸ்தான் தேசிய கீதமும் பாடினார் இந்த நிகழ்ச்சியில் அவருடன் ஏராளமான காஷ்மீர்  இஸ்லாமிய பெண்கள்  கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைத்து, பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.