ஜெய்ப்பூர்

 பாஜக ராஜஸ்தான் மாநில ஆட்சியை கலைக்க முடியாத எரிச்சலில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

வரும் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியைத் தக்க வைக்கக் காங்கிரஸ், மற்றும் ஆட்சியைப் பிடிக்க பாஜக.ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று ஜெய்ப்பூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.

அசோக் கெலாட்,

“பிரதமரும் அவருடைய மொத்த குழுவினரும் ராஜஸ்தானில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் வரை மட்டுமே தங்கியிருப்பார்கள். பிறகு அந்த கட்சி முகம் காட்டாது.

பாஜக ஏற்கனவே மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசைக் கவிழ்த்து விட்டு ஆட்சியமைத்தது.  அதுபோன்று ராஜஸ்தானில் அவர்களால் செய்ய முடியவில்லை. எனவே பாஜகவினர் எரிச்சலில் உள்ளனர்

மாநில அரசுகளைக் கவிழ்க்க அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. அமைப்புகள் ஆகியவற்றை பாஜக. தவறாகப் பயன்படுத்துகிறது.”

என்று தெரிவித்துள்ளார்.