தேஜ்பூர்

அசாம் மாநில தேஜ்பூர் கடைகளில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு வாசகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நாடெங்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.  ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  தமிழ்நாட்டில் மார்கழி மாதக் கோலங்கள் சிறப்பு என்பதால் கோலம் மூலம் எதிர்ப்பு வாசகங்கள் வரையப்படுகின்றன.

இந்த போராட்டத்தை முதலில் தொடங்கி நடத்தியது அசாம் மாநிலம் ஆகும்.   இங்கு முதன்முதலாகத் தேசிய குடியுரிமை பதிவேடு அமல் செய்யப்பட்டபோது லட்சக் கணக்கானோர் குடியுரிமையை இழந்தனர்.  இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலாக்கப்பட்டது.

இதையொட்டி அசாம் மாநில மாணவர் சங்கம் தொடங்கிய போராட்டத்தில் பொதுமக்கள், திரைக்கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர் என பல தரப்பட்டவரும் ஈடுபட்டு வருகின்றனர்.   இதன் ஒரு பகுதியாக வர்த்தகர்களும் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

அசாம் மாநிலம் தேஜ்பூர்  கடைத் தெருவில் உள்ள பல கடைகளில் ஷோ கேஸ்களில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.  இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.