பெங்களூரு

ச் ஏ எல் நிறுவன ஊழியர்களின் ஊதியத் திருத்தப் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து 20000 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூருவில் இயங்கி வரும் அரசு நிறுவனமான எச் ஏ எல் நிறுவனத்தில் கடந்த 2017 ஆம் தேதி ஜனவரி 1 முதல் ஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் செய்யப்படாமல் உள்ளது.  இதற்கு முன்பு 2012 ஆம் வருடத்திலும் அதற்கும் முன்பு 2007 ஆம் வருடமும் நடந்தது.  தற்போது ஐந்து வருடம் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையொட்டி ஊழியர் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் தொடர்ந்து பலமுறை பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.   நேற்று மற்றும் அதற்கு முன் தினம் நடந்தப் பேச்சு வார்த்தையில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது.  எனவே இன்று முதல் 20000 எச் ஏ எல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எச் ஏ எல் நிர்வாகம், “ஊதியத் திருத்தத்தை இணக்கமான முறையில் கொண்டு வர பல ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த பேச்சு வார்த்தைகளில் நிர்வாகத்தின் பல சிக்கல்கள் எடுத்துரைக்கப்பட்டன   அத்துடன் வேலை நிறுத்தம் நடந்தால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.   ஆயினும் தொழிற்சங்கங்கள் துரதிருஷ்டவசமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளது.