காஷ்மீரில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மருத்துவர்கள், துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து

Must read

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, மருத்துவர்கள், துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக காஷ்மீர் மருத்துவத்துறை இயக்குநர் முஷ்தாக் அஹ்மத் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொரோனா தொற்று அதிகளவில் பரவியுள்ளதால், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மாவட்ட மற்றும் தடுப்பு மருத்துவ அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.

மகப்பேறு மற்றும் அவசரகால விடுப்பில் உள்ள ஊழியர்களை தவிர மற்ற அனைவரும் உடனடியாக தாங்கள் பணியிடங்களில் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article