மும்பை
காராஷ்டிர மாநில சட்ட மேலவைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவை அமைப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது.
பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கிடையில் முதல்வர் பதவி பங்கீடு சர்ச்சை தொடர்ந்தது.
சிவசேனா கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.
முதல்வராகப் பொறுப்பு ஏற்ற சிவ்சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த மாத இறுதிக்குள் சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினராக வேண்டும்.
தற்போது சட்ட மேலவையில் காலியாக உள்ள 9 இடங்களில் 1 இடத்துக்கு உத்தவ் தாக்கரே பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
மீதம் உள்ள எட்டு இடங்களில் போட்டியிட பாஜகவைச் சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 8 பேர் மட்டும் மனு செய்தனர்.
எனவே உத்தவ் தாக்கரே உள்ளிட்ட மனுத் தாக்கல் செய்த 9 பேரும்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.