நாடு முழுவதும் 3000 சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்கலாம்: உள்துறை அமைச்சகம் அனுமதி

Must read

டெல்லி: நாடு முழுவதும் 3000 சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இயின் கீழ் 3000 பள்ளிகளை 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வாரிய தேர்வு வினாத்தாள்களின் மதிப்பீட்டைத் தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 3000 பள்ளிகளுடன், மத்திய வாரியத்தின் 16 பிராந்திய அலுவலகங்களும் கோவிட் -19 வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட ஆரம்பிக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கற்பித்தல், வழக்கமான கல்வி நடைமுறைகளுக்கு இன்னும் அனுமதிக்கவில்லை. இந்தியா முழுவதும் 3000 சிபிஎஸ்இ இணைந்த பள்ளிகள் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மதிப்பீட்டின் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக இந்த பள்ளிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.
இது 2.5 கோடி விடைத்தாள்களை விரைவாக மதிப்பீடு செய்ய எங்களுக்கு உதவும். மீதமுள்ள வாரிய தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 வரை திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்டு பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும்  கூறினார்.

More articles

Latest article