டில்லி:

முதன்முதலாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாரம்பரிய முறைப்படி, நிதி அமைச்சக அதிகாரிகளுடன் சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, அவரிடம் பட்ஜெட்டை முதலில் சமர்ப்பித்து விளக்கினார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி அப்போதைய நிதி மந்திரி பியூஸ் கோயலால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  நடந்து முடிந்து, பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றது. நிதி மந்திரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார்.

பதவி ஏற்ற சூட்டோடு சூடாக அவர் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். அதன் பணிகள் முடிவடைந்து இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை முதன்முறையாக தாக்கல் செய்கிறார்.

முன்னதாக பாரம்பரிய முறைப்படி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, அவரிடம் பட்ஜெட்டை  சமர்ப்பித்து விளக்கினார்.

நிதி அமைச்சக அதிகாரிகளுடன் சென்ற நிர்மலா ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவரை சந்தித்து, அவருடன் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.