ராமநாதபுரம்: ராமேஸ்வரம் – மண்டபம் பகுதியை இணைக்கும் வகையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில்வே தூக்குப் பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகர மாக நடைபெற்றது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடல் பகுதியை இணைக்கக் கூடிய பாம்பன் ரயில்வே பழைய பாலம் கடந்த 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு நூறு ஆண்டுக்கு மேல் ஆகிறது. தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பழைய பாலம் சேவை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய பாலம் அமைக்க மத்தியஅரசு, ரூ.535 கோடி ஒதுக்கிடு செய்து பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது புதிய பாலம் அமைக்கும் பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தற்போது, பாலத்தின் நடுவே படகுகள் மற்றும் கப்பல்கள் கடந்து செல்வதற்காகத் தானியங்கி தூக்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து பாலத்தில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, புதிய ரயில்வே தானியங்கி தூக்கப்படும் வீல்கள் பொருத்தப்பட்டு தானியங்கி தூக்கு பாலம் நடுவே இணைக்கப்பட்ட நிலையில், அதில் ரயில் என்ஜின் கொண்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மீதமுள்ள பகுதிகளில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும்,
இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலம் விரைவில் நிஜமாகும்! புதிய #பாம்பன் பாலத்தை இயக்குவதன் ஒரு பகுதியாக, பாலத்தின் முழுப் பகுதியிலும் டவர் கார் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது என்று தெற்கு ரயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.