சென்னை

ற்போது சென்னையை நோக்கி வரும் மிக்ஜம் புய்ள் சென்னைக்கு 230 கிமீ தூரத்தில் உள்ள து. 

இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலை முன்னிட்டு டிஎன்பிஎஸ்சி நேர்முகத்தேர்வு தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 230 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் மிக்ஜம் புயல் வேகமெடுத்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தீவிர புயலாகக் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.