ஸ்லாமாபாத்

ந்தியா கலந்துக் கொள்ளும் இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் கலந்துக் கொள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மறுத்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகள் அமைப்பு 57 இஸ்லாமிய நாடுகளைக் கொண்டதாகும்.  இந்த இஸ்லாமிய நாடுகள் அமைப்பை தொடங்கிய நாடுகளில்  பாகிஸ்தானும் ஒன்றாகும்.   இந்த அமைப்பின் மாநாடு இன்றும் நாளையும் அமிரகத்தில் உள்ள அபுதாபியில் நடைபெறுகிறது.   அந்த மாநாட்டுக்கு முதன்முறையாக இந்தியாவுக்கு அமீரக அரசு அழைப்பு விடுத்தது.   அத்துடன் இந்தியாவில் அதிக அளவில் இஸ்லாமியர் வசிப்பதால் சிறப்பு விருந்தினர் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

இந்த அழைப்பை இந்தியா ஏற்றுக் கொண்டது.

இந்த மாநாட்டுக்கு இந்தியாவுக்கு அளித்த அழைப்பை அமீரகம் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் சார்பில் அமீரகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  இந்த இஸ்லாமிய நாடுகள் அமைப்பை தொடங்கிய நாடுகளில்  பாகிஸ்தானும் ஒன்றாகும்.   ஆகவே தங்கள் பணியை மனதில் கொண்டு இந்தியாவுக்கு அளித்துள்ள அழைப்பை ரத்து செய்ய வேண்டும் என அமீரகத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் அதற்கு அமீரகம் ஒப்புக் கொள்ளவில்லை.    அந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அபுதாபிக்கு நேற்று இரவு சென்றுள்ளார்.

அதை ஒட்டி இந்த மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துக் கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி, “இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துக் கொள்கிறரர்.   இந்தியா கலந்துக் கொள்ளும் மாநாட்டில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன் என்னும் எனது கொள்கையின்படி  நான் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.