சூரத்

சூரத் நகரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களைப் போல் 11 மடங்கு வரை அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் மரண எண்ணிக்கை மிக மிக அதிகமாக உள்ளது.  இவ்வாறு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத் மாநிலமும் ஒன்றாகும்.  குறிப்பாக சூரத் மாவட்டத்தில் சுமார் 1900க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் உண்மையில் அதைப் போல் பன்மடங்கு அதிகமாக இருக்கும்  என கூறப்படுகிறது.   இதையொட்டி மயானங்களில் உள்ள விவரங்களைக் கணக்கெடுத்தபோது மரணம் அடைந்தோர் எண்ணிக்கை பன்ம்டக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  குறிப்பாக சுரத் நகரில் மட்டும் அரசு அறிவித்ததை போல் 11 மடங்கு கொரோனா மரண சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

இது குறித்து குஜராத்தி செய்தித்தாள் ஒன்று கடந்த வருடத்தை விட இந்த வருடம் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேலானதாகத் தெரிவித்துள்ளது.   அதே வேளையில் மயானங்களில் எரியூட்டக் காத்திருக்கும் சடலங்களின் எண்ணிக்கை கிட்ட்த்தட்ட 10 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் அந்த செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரத் நகரில் உள்ள அனைத்து மயானங்களிலும் சடலங்கள் தொடர்ந்து எரியூட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு மயான அதிகாரி மருத்துவமனைகளில் இருந்து 25 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு சடலம் வருகின்றன எனவும் இவை இரவு நேரங்களிலும் தொடர்ந்து வருவதால் மயானம் தொடர்ந்து இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதைப் போல் பல இடுகாடுகளில் கொரோனா மரண சடலங்களைப் புதைக்க ஜேசிபி கொண்டு குழு தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.   கொரோனா மரண சடலங்கள் அதிகரித்து வருவதால் மனிதர்களை கொண்டு குழி தோண்ட முடியாத அளவுக்குப் பணி அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..