சென்னை விமான நிலையம் : வாகனங்கள் நுழைவுக் கட்டணத்தால் மக்கள் அதிருப்தி

Must read

சென்னை

சென்னை விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குபவர்களை அழைத்துச் செல்ல வரும்  வாகனங்களுக்கு எனத் தனி வரிசை உள்ளது.   இந்த வரிசைக்குள் நுழையப்  பணம் செலுத்த வேண்டியதில்லை.    இந்த வரிசையில் நுழைபவர்கள் உடனடியாக அவரவர் வாகனத்தில் ஏறிக் கொண்டு அந்த வரிசையை விட்டு நீங்க வேண்டும் என்பதே விதியாகும்.   ஆயினும் பயணிகள் வந்து ஏறிக் கொள்ள சிறிது நேரம் ஆகி விடுவது வழக்கமான ஒன்றாகும்.

எனவே இவ்வாறு நேரம் எடுத்துக் கொள்ளும் வாகனங்களை மனதில் கருதி அனைத்து வாகனங்களும் இந்த வரிசையில் அனுமதிக்கப்படுவதில்லை.   அதற்கு பதிலாக  வாகன நிறுத்துமிடத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.   அங்கு செல்ல நுழைவுக் கட்டணமாக ரூ.40 செலுத்த வேண்டி உள்ளது.    மேலும்  பயணிகள் நுழைவாயிலில் இருந்து வாகன நிறுத்துமிடத்துக்கு நடந்து வந்து வாகனங்களில் ஏறிச் செல்ல வேண்டி உள்ளது.

அதே நேரத்தில் ஓலா உள்ளிட்ட உரிமம் பெற்ற வாடகை வாகனங்களுக்கு இந்த வரிசை அருகே தனி வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.   அவர்கள் நேரடியாக விமான நிலைய வெளி வாயிலில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.   ஆனால் தனியார் வாகனங்கள் மற்றும் உரிமம் பெறாத வாடகை வாகனங்கள்  நிறுத்துமிடத்தில் கட்டணம் செலுத்திக் காத்திருக்க வேண்டி உள்ளது.  இது மக்கள் மனதில் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

More articles

Latest article