மும்பை: 
ர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? –  என்று மும்பை நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
சொகுசு கப்பலில் நடைபெற்ற போதையுடன் கூடிய கேளிக்கை விருந்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான்,  போதை தடுப்பு பிரிவு சோதனையின்போது, அக்டோபர் 8ஆம் தேதி கைது  செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து வந்தது. இதனால் சுமார் 3 வாரக் காலம் அவர் சிறையில் வாடினார்.
இநத் நிலையில், ஆர்யன்கான் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஆர்யன்கானிடம்  போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டதுடன் அவருக்கு  ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? –  என்று மும்பை நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.   அதில்,  போதைப் பொருளை நேரடியாக கையாண்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்றும்  தொழிலதிபர் அர்பாசுக்கும், ஆர்யன் கானுக்கும் இடையே வாட்ஸ்அப் உரையாடல்களில் சந்தேகத்திற்கு இடமான தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது.  மேலும் ஒரே கப்பலில் பயணம் செய்தார்கள் என்ற காரணத்திற்கான மட்டும் ஆர்யன் கானை போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்புப் படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.