அருணாசலப் பிரதேசம் :  போதை மருந்து விற்ற பாஜக எம் எல் ஏ மகன் கைது

Must read

தாநகர்

ருணாசலப் பிரதேச சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் லோகம் தசார் என்பவர் மகன் போதை மருந்து விற்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தில் இதா நகர் மற்றும் அதற்கு 15 கிமீ தூரமுள்ள நகரலகுன் ஆகிய இரு பகுதிகளும் சேர்ந்து தலைநகர் வளாகம் என அழைக்கப்படுகின்றன.   இந்த வளாகத்தில் ரோந்து சென்ற காவல்துறை சூப்பிரண்ட் அதிகாரி 4 இளைஞர்கள் போதையில் கலாட்டா செய்வதைக் கண்டு அவர்களைக் கைது செய்தார்.

அவர்களிடம் நடந்த விசாரணையில் அவர்கள் போதை மருந்தை லுலு என்பவரிடம் வாங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.   அந்தப் பகுதி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் லோகம் தசார் என்பவரின் மகன் லுலு என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.   காவல்துறையினர் லுலுவின் வீட்டுக்குச் சென்ற போது அவர் அங்கு இல்லை.

அதன் பிறகு அவரைத் தேடி அவருடைய மனைவி வீட்டில் பதுங்கி இருந்ததைக் கண்டறிந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.   அவரிடம் இருந்து 10 கிராம் ஹெராயின், ரொக்கப் பணம், மற்றும் காலி ஊசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.   காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article