ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்கத்தில் #AV30(அருண் விஜய்யின் 30ஆவது படம்) படத்தை மூவிங் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக பலக் லால்வாணி நடிக்கிறார் .

இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது எதிர்பாரா விதமாக அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் ட்விட்டரில் ‘வேலையில் இருக்கும் போது படும் காயம் வலி தெரியாது. இது நான் நேசித்து ஏற்றுக் கொண்ட பயணம். அத்தனை தழும்புகளும் ஒரு கதை சொல்லும்’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அருண் விஜய் காயத்திற்கு ஸ்டண்ட் சில்வா மருந்து போடுவது போல் உள்ளது.