நடிகர்கள் ரஜினிகாந்திற்கும், கமல்ஹாசனிற்கும் அரசியல் வேண்டாம் என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

விகடன் குழுமத்திற்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ள நடிகர் சிரஞ்சீவி, “இப்போ அரசியல்ல எல்லாமே பணம் தான். உண்மையா, நல்ல அரசியல் பண்ணனும்னு வருவோம். ஆனா பண்ண முடியாது. சினிமாவுல நான் நம்பர் 1 இடத்துல இருந்தேன். அதையெல்லாம் விட்டுட்டு அரசியலுக்கு வந்தேன்னா, அப்போ எவ்வளவு ஆர்வத்தோட வந்திருப்பேன்னு பாருங்க. ஆனா என் சொந்த தொகுதியிலேயே என்னை தோற்கடிச்சாங்க. என்ன தோற்கடிக்க கோடிக்கணக்குல செலவு பண்ணினாங்க. தோற்கடிச்சாங்க. அப்போ நான் ரொம்ப நொந்துபோயிட்டேன். இதேதான் என் தம்பி பவன் கல்யாணுக்கும் நடந்துச்சு.

இந்த முறை கமல் ஜெயிப்பாருன்னு எதிர்பார்த்தேன். ஆனா அது நடக்கலை. தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் எல்லாவற்றையும் பொருத்துக்கிட்டு இருந்தா யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முன்னாடி சொன்ன மாதிரி என்னை போல சென்சிடிவா இருக்குறவங்களுக்கு அரசியல் சரிவராது. கமல், ரஜினி என்னை மாதிரி இருக்கமாட்டாங்கன்னு நினைக்குறேன். என் நண்பர்கள் ரஜினி, கமல் இருக்கும் என்னோட வேண்டுகோள் ஒன்னு தான். அரசியல் வேண்டாம். Its not worth it. ஆனா இதையெல்லாம் மீறி எவ்வளவு தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் வந்தாலும், அசராம மக்களுக்காக ஏதாவது செஞ்சே ஆகனும்னு நினைச்சா, அரசியலுக்கு வாங்க. அரசியல்ல தைரியமா செயல்படுங்க. ஒரு நாள் காலம் உங்களுக்கானதா மாறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் இந்த கருத்து, ஆந்திரா மட்டுமல்லாது, தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.