அருண்விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்கத்தில் வெளியாகும் படம் ‘சினம்’.

குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அருண் விஜய் போலீசாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வந்தன.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. இன்று அருண்விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர், இந்த போஸ்டரும் ரசிகர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.