டில்லி

த்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரூ, 2000 நோட்டுக்களை தடை செய்ய அரசு ஏதும் திட்டமிடவில்லை எனவும் ரூ. 200 நோட்டுக்கள் வெளியிடுவதை பற்றி ரிசர்வ் வங்கி முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த வருடம், ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுக்கள் செல்லாதவை என அரசு அறிவித்தது.   பின்பு புதிய ரூ. 2000 மற்றும் ரூ. 500 நோட்டுக்கள் வெளியிடப்பட்டது.  கடந்த சில நாட்களாக அரசு ரூ.2000 நோட்டுக்களை தடை செய்யப்போவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.   அதற்கேற்றார் போல் தற்போது ரூ. 2000 நோட்டுக்களும் அதிகம் புழக்கத்தில் இல்லை.  இது குறித்து செய்தியாளர்கள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கேட்டார்கள்.

அருண் ஜெட்லி, ”அரசுக்கு ரூ 2000 நோட்டுகளை தடை செய்யும் எண்ணம் இல்லை.   அது போல எந்த ஒரு முடிவும் அரசு எடுக்கவில்லை.  ரூ. 200 நோட்டுக்களுக்கு அரசு தனது ஒப்புதலை ரிசர்வ் வங்கிக்கு அளித்து விட்டது.  ரிசர்வ் வங்கி அவற்றை எப்போது அச்சடிப்பது, எப்போது வெளியிடுவது என்பதைப் பற்றி முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும்.” எனக் கூறினார்.