டில்லி:

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின் அருண் ஜெட்லி வீடு திரும்பியள்ளார்

சிறுநீரக கோளாறு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் அருண்ஜெட்லி வைக்கப்பட்டார். அவர் மெல்ல மெல்ல குணமடைய தொடங்கியதை தொடர்ந்து அவர் இன்று வீடு திரும்பினார். வீட்டில் இருந்தே தொடர் சிகிச்சையை மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.