சென்னை:
கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு  மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஆயுஷ் மருந்துகளான சித்த மருத்துவம், ஓமியோபதி மற்றும் ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து சித்தமருத்துவத்தில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் சிறப்பு  மருந்தான Arsenicam album 30 என்ற மருந்து உட்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த Arsenicam album 30  மருந்தை தொடர்ந்து  3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 
ஏற்கனவே மத்திய ஆயுஷ் அனுமதி வழங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் ஹோமியோபதி மருந்தை செயல்படுத்துவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சக பரிந்துரை செயல்படுத்துவதாக அரசு கூறியதால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.