சென்னை:
அடாவடியாக பேசிய இளைஞரை காவலர்கள் கட்டி வைத்து அடித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாய் மற்றும் சகோதரியுடன் தியாகராயநகரில் பொருட்கள் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் மூவராக வீடு திரும்பிக்கொண்டிந்தார்.
துரைசாமி சுரங்கப்பாதை பகுதியில் வந்தபோது. அவரை தடுத்து நிறுத்தி காவலர்கள், ஏன் தலைக்கவசம் அணியவில்லை எனவும், இருசக்கரம் வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தது குறித்தும் விசாரித்துள்ளனர்.
அதற்கு ஹெல்மெட் வாங்க வசதி இல்லை என கிண்டலாக பிரகாஷ் பதிலளித்துள்ளார். காவலர் ஒருவர், “மூவராக சென்றால் ஆட்டோவில் போகலாமே” என்று கேட்டிருக்கிறார். அதற்கும் அடாடவடியாக பிரகாஷ் அடாவடியாக பதில் அளித்திருக்கிறார். மேலும், தனக்கு வி.ஐ.பி.க்களைத் தெரியும் என்றும் மிரட்டலாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து பிரகாஷ் பேசுவதை, வலர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். பதிலுக்கு பிரகாஷூம் தன் செல்போனில் காவல்துறையினரை வீடியோ எடுத்திருக்கிறார்.
இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவலர் கையை ஓங்க, அவரது சட்டையைப் பிடித்திருக்கிறார் பிரகாஷ். இதனால் அந்த ஏற்பட்ட தகராறு முற்றி பிரகாஷை காவலர்கள் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினர். இடையில் புகுந்து தடுக்க முயன்ற இளைஞரின் தாயாரும் தாக்கப்பட்டார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பிராகாஷ் அடாவடியாக பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.
பிரகாஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
காவல்துறையினரிடம், இளைஞர் அடாவடியாக பேசும் காட்சியும்
காவல்துறை இளைஞரையும், அவரது தாயாரையும் தாக்கும் காட்சியும்..
[embedyt] https://www.youtube.com/watch?v=OEaQ3Rj9GIY[/embedyt]