சென்னை,

திமுக பொதுச்செயலாளர் சசிகலா கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்க முயற்சித்து வருகிறார்.

இந்தநிலையில் தமிழக முதல்வராக அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான சோபியா தேன் மொழி என்பவர், 2 நாட்களுக்கு முன்பு சசிகலாவுக்கு எதிராக பாடல் பாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமூக வலைதளங்களில் சசிகலா  பலவாறான மீம்ஸ்கள் உலா வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் போரூரைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் சுமார் 10 பேர் சசிகலாவை புகழ்ந்து பாடியபடி போயஸ் தோட்டத்துக்கு வந்தனர்.

அவரை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் சசிகலா புகழ்ந்து பாட வந்துள்ளோம் என்று கூறினார். சரி,   புகழ்ந்துதானே பாடுகிறார்கள் என்று நினைத்து தற்போது சசிகலா வசித்து வரும் ஜெயலலிதா போயஸ் தோட்டம் வீடு வரை  அவர்களை அனுமதித்து விட்டனர்.

வாசலுக்கு அருகே சென்றதும் அதிமுக தொண்டர்கள், தாங்கள்  மறைத்து வைத்திருந்த சங்கை எடுத்து திடீரென ஊத தொடங்கினர்.

நள்ளிரவில் ஒருசேர 10 பேர் சேர்ந்து சங்கு ஊதியதால் அந்த இடமே பரபரப்பாகி விட்டது.

அப்போது வீட்டுக்குள் இருந்த சசிகலா, சங்கு சத்தம் கேட்டு வெளியே வந்து பால்கனியில் வந்து நின்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத போலீஸார், உடனடியாக 10 பேரையும் பிடித்து ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.