நில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரருக்கு ‘பிடி வாரண்டு’

Must read

நில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரருக்கு ‘பிடி வாரண்டு’

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் இப்போது பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் ,சசிகலாவின் சகோதரர் டி.வி. சுந்தரவதனம், நில அபகரிப்பு வழக்கில் சிக்கி உள்ளார்.

 ஆற்காடு கிராமத்தில் வளர்மதி என்பவருக்குச் சொந்தமாக 4.8 ஏக்கர் நிலம் இருந்தது.  இதனைக் கடந்த 2008 ஆம் ஆண்டு சுந்தரவதனம், தன்  பெயரில் வலுக்கட்டாயமாக , எழுதி வாங்கிக் கொண்டதாக வளர்மதி புகார் அளித்துள்ளார்.

 இது தொடர்பான வழக்கு திருவையாறு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சுந்தரவதனம் உள்ளிட்ட 11 பேர் , நீதிமன்றத்தில் கடந்த 7 ஆம் தேதி ஆஜர் ஆக வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, சுந்தரவதனம் உள்ளிட்ட 11 பேருக்கும், திருவையாறு நீதிமன்றம் ‘பிடி வாரண்டு’ உத்தரவு பிறப்பித்துள்ளது.

-பா.பாரதி.

More articles

Latest article