மும்பை

ரிபப்ளிக் டிவி உரிமையாளர் வாட்ஸ்அப் தளத்தில் விவாதித்த போது புல்வாமா தாக்குதல் குறித்த ராணுவ ரகசியங்களை முன்பே கூறி உள்ளது தெரிய வந்துள்ளது.

ரிபப்ளிக் டீவி உரிமையாளரான அர்னாப் கோஸ்வாமி இதற்கு முன்பு டைம்ஸ் நவ் டிவி சேனலில் பணி புரிந்து வந்தார்.  அப்போதிலிருந்தே அவர் ஒரு தீவிர வலது சாரியாக பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்.  அதன் பிறகு அவர் தனது சொந்த தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவியை தொடங்கி நடத்தி வருகிறார்.

அவர் தனது டிவி சேனலின் டி ஆர் பி ரேட்டிங்கை அதிகரிக்க முறைகேடாக பலர் பார்ப்பதைப் போல் போலியாகப் பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் கூட்டியது குறித்து மகாராஷ்டிர காவல்துறையினர் புகார் எழுப்பினர்.  நாடெங்கும் கடும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த புகார் குறித்து மும்பை காவல்துறையினர் தீவிர விசாரணை ந்டத்தி வருகின்றனர்.  இந்த வழக்கில் ரிபப்ளிக் டிவி தலைமை அதிகாரி விகாஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

டி ஆர் பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்த நிறுவனமான பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தா மற்றும் அர்னாப் கோஸ்வாமி ஆகியோரின் வாட்ஸ்அப் விவாதங்கள் வெளியாகி உள்ளன.  இந்த உரையாடல்கள் மும்பை காவல்துறையினரின் துணை குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளன.  இவற்றை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்

இந்த பதிவின் மூலம் அர்னாப் கோஸ்வாமி மத்திய அரசின் பல முக்கிய முடிவுகளில் இடைத் தரகராகச் செயல்பட்டுள்ளது அம்பலமாகி அதிர்வை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் 370 ஆம் பிரிவு நீக்கம் குறித்து இவர் ஏற்கனவே அறிந்துள்ளார்.,  அது மட்டுமின்றி புல்வாமா தாக்குதல் குறித்தவை பற்றியும் இவர் முன் கூட்டியே பார்த்தோ தாஸ் குப்தாவுடன் வாட்ஸ்அப்பில் உரையாடி உள்ளதும்  தெரிய வந்துள்ளது.

பிரசாந்த் பூஷன் தனது பதிவில், “பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அர்னாப் முன்கூட்டியே அறிந்துள்ளார்,.  இதை அவரது வாட்ஸ்அப் விவாதங்கள் வெளிப்படுத்தி உள்ளன.  ஊடகங்களைப் பயன்படுத்தி வரும் அர்னாப் கோஸ்வாமி ஒரு அதிகார தரகராகச் செயல்பட்டுள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.  இந்நாட்டில் சட்டம் என ஒன்று இருக்குமானால் இதற்காக அர்னாப் கோஸ்வாமி நீண்டகாலம் சிறையில் தள்ளப்பட வேண்டியவர் ஆவார்.” எனத் தெரிவித்துள்ளார்.