புதுடெல்லி:

சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவு கொண்டு வர மத்திய அரசு இதுவரை ஒன்பது சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பவில்லை.

இந்நிலையில், நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல், மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டுதல், மத்திய அரசுக்கு எதிராக செயல்படுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில், ‘சீக்கியர்களுக்கு நீதி’ (எஸ்எப்ஜே) என்ற சட்டவிரோத அமைப்பின் தலைவர் குர்பட்வந்த் சிங் பன்னு செயல்படுவதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

எஸ்எப்ஜே அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்தேவ் சிங் சிர்சாவுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பி உள்ளது. அதில், 17-ம்தேதி (இன்று) டெல்லியில் உள்ளஎன்ஐஏ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.