டில்லி:

குடியரசு தலைவர மாளிகையில் விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் பாரா பாராலிம்பிக்கில் சாதனைப் படைத்த தமிழக வீரர்  மாரியப்பன் குடியரசுத தலைவரிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள ஏராளமான வீரர்கள் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது. இந்த . ஆண்டுக்கான விருதுகளுக்கு தகுதியான வீரர்-வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதில்  தேர்வான வீரர்களுக்கு இந்தியாவின் விளையாட்டுத் தினமான நேற்று (ஆக.29) குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

பாராலிம்பிக்கில் சாதனைப் படைத்த தமிழக வீரர் மாரியப்பன் ஜனாதிபதியிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றுக் கொண்டார். மேலும், தமிழக வீரர்கள் அந்தோணி அமல்ராஜ், தடகள வீரர் ஆரோக்ய ராஜீவ் உள்ளிட்டோரும் அர்ஜுனா விருதுகளைப் பெற்றனர்.

இவர்களுடன் சேர்ந்த  மேலும் 16 பேர் அர்ஜூனா விருதை பெற்றுக் கொண்டனர்.

விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஹாக்கி வீரர் சர்தார் சிங், பாராலிம்பிக் வீரர் தேவேந்திரி ஜஹாரியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஜூனியர் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்ட ரிலையன்ஸ் பவுண்டேசனுக்கு ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நீடா அம்பானி பெற்றுக் கொண்டார்.