சென்னை: பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவர்களை தொழிமுனைவோராக்கும்  முயற்சியாக  தமிழ்நாடு அரசன் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின்  மூலம்  மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி அளிக்கிறது. விருப்பமுள்றளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.09.2025 முதல் 12.09.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. பிரைடல், ஃபேஷன், சினிமா, HD மேக்கப், ஹேர்ஸ்டைல், ஸ்கின் கேர், SFX வரை அனைத்தும் ஒரே இடத்தில் கற்கும் முழுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600 032.

தொழில்முறை மேக்கப் படிப்பு 

*மேம்பட்ட மேக்கப் நுட்பங்கள்

*ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (SFX) மேக்கப்

*ஃபாஷன் & எடிட்டோரியல் மேக்கப்

*மணமகள் மேக்கப் (நிச்சயதார்த்தம். திருமணம், வரவேற்பு)

*டியூவி / கிளாஸ் ஸ்கின் மேக்கப்

*வியர்வை தடுக்கும் & நீர்ப்புகா மேக்கப் முறைகள்

*சுய அலங்கார அத்தியாவசியங்கள்

*நிறக் கோட்பாடு மற்றும் முக திருத்த நுட்பங்கள்

*சரும பராமரிப்பு & சென்சிடிவிட்டி டெஸ்ட்

*மேம்பட்ட கண் மேக்கப் & ஐ ஷேடோ நுட்பங்கள்

*HD. 3D & 4D மேக்கப் நுட்பங்கள்

*புருவ அலங்காரம் (natural brows styling )

*Pro Makeup Tech தொழில்முறை மேக்கப் தொழில்நுட்பம்

*தலைமுடி அலங்காரம் மேம்பட்ட பாணிகள்

*புடவை அணிதல் (முன்-மடிப்பு & பெட்டி-மடிப்பு)

*வாடிக்கையாளர் ஆலோசனை & சேவை அணுகுமுறை

*போர்ட்ஃபோலியோ உருவாக்கம் (தொழில் வளர்ச்சிக்காக)

*நெட்வொர்க்கிங் & தொழில் வாய்ப்புகள்

*தயாரிப்பு அறிவு & விற்பனையாளர் ஆதரவு

*100% நடைமுறை (Hands-on) பயிற்சி.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337/9360221280 அரசு சான்றிதழ் வழங்கப்படும்முன்பதிவு அவசியம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]