சென்னை,

மிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அமைப்பான  ஜாக்டோ ஜியோவின்   தொடர்  போராராட்டம்  நடைபெற்று வருகிறது.

போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்திருந்தும், தடையை மீறி தமிழகம் முழுவதும் ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில்கள் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், போராட்டம் குறித்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆசிரி யர்களுக்கு உயநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும்  ஆசிரியர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.

 

7ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தமிழக அரசின் 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும், தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஜாக்டோ, ஜியோ அமைப்பு போராடி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற  அமைச்சர்கள் மற்றும் முதல்வருடன்  நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இதன் காரணமாக பெரும்பாலான அரசு பள்ளிகள் இயங்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உயநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்டிரைகால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு நஷ்டஈடு தர உத்திரவிட நேரிடும் எனவும், அரசு ஊழியர்களின்  சங்கங்களை சரிசெய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும்,  நீதிமன்ற உத்தரவை ஆசிரியர்கள் மதிக்கவில்லை என்றால் அவர்கள் கோர்ட்டுக்கு வர முடியாது என்று எச்சரித்த நீதிபதி, ஆசிரியர்கள் என்ன அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ற நீதிபதி, ஆசிரியர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு கிளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், சென்னை ஐகோர்ட்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.