அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு : தமிழக முதல்வர் அறிவிப்பு

Must read

சென்னை

ரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கேபிள் டிவி முதலில் அனலாக் முறையில் இருந்தது.  அப்போது கேபிள் டிவிக்கு மாதக்கட்டணமாக ரூ. 70 வசூல் செய்யப்பட்டது. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது டிஜிட்டல் ஒளிபரப்பாக மாறியது. இந்த டிஜிட்டல் ஒளிபரப்புக்கு மத்திய அரசின் உரிமம் பெற்ற முதல் அரசு கேபிள் டிவி தமிழக அரசு கேபிள் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழக அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ. 200 ஆக இருந்ததை ரூ. 130  + ஜிஎஸ்டி எனக் குறைக்க உள்ளது. இந்த புதிய கட்டணம் ஆகஸ்ட் 10 முதல் தமிழகம் எங்கும் அமலாக்கப்பட உள்ளது.

தற்போது வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளன. அதனால் அந்த மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் இந்த கட்டணக் குறைப்பு ஆகஸ்ட் 10 முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க இந்த கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article