‘Auraa Cinemas’ தயாரிப்பில் , இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் வீரா, மாளவிகா நாயர், ஷா ரா, பசுபதி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’.

சுதர்ஷன் ஒளிப்பதிவில் , எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் , மாட்லி ப்ளூஸ் இசையில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ உருவாகிவருகிறது.

இந்தப் படத்திற்கு மேட்லி ப்ளுஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.