எடப்பாடி மீது புதிய ஊழல் புகார் தெரிவிக்கும் அறப்போர் இயக்கம்  

Must read

சென்னை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது புதியதாக ரூ.692 கோடி ஊழல் புகார் ஒன்றை அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.

கடந்த 2020 ஆம் வருடம் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைகளை மேம்ப்டுத்த டெண்டர் வழங்கப்பட்டது.  இவ்வாறு வழங்க[[அட்ட 3 டெண்டர்களில் முறைகேடு நடந்து அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.

இந்த புகாரில்

“நெடுஞ்சாலைத் துறையை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனித்தபோது தஞ்சை கோட்டத்தில் சாலைகளை மேம்படுத்த 2020 ஆம் வருடம் வழங்கப்பட்ட 3 டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளது.  இதனால் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.   இந்த டெனெடர்கள் ஆர் ஆர், எஸ் பி கே, கே சி பி  ஆகிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 நிறுவன அதிபர்களின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த வருமானம் நெடுஞ்சாலை பணிகளின் மூலம் வந்திருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது.  எனவே இந்த சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை  விசாரணை நடத்த வேண்டும்.” 

எனக் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article