சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை 2’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது ஆர்யாவை வைத்து ‘அரண்மனை 3’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் சுந்தர் சி. ஆர்யாவுடன் சாக்சி அகர்வால், ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘அரண்மனை 3’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக படக்குழு உருவாக்கிய வீடியோவும் தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது.

https://twitter.com/RaashiiKhanna_/status/1384748875857088513