சுந்தர் சி யின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தோல்வியிலிருந்து மீண்டு,சுந்தர்.சி.அவரது இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா, ராஷி கண்ணா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இதுவரை சாக்லேட் பாயாக நடித்து வந்த ஆர்யாவை இந்த படத்தில் முதன் முதலாக பேயாக நடிக்க வைத்துள்ளாராம் சுந்தர் சி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

‘அரண்மனை 3’ திரைப்படம் அடுத்த மாதம் ஆயுத பூஜை தினத்தையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை உறுதிசெய்யும் விதமாக தயாரிப்பாளர் குஷ்பு ட்வீட் செய்துள்ளார். ‘அரண்மனை 3’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, அடுத்த மாத வெளியீட்டிற்கு தயாராக உள்ளதாக அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.