சென்னை:  ஞாயிறன்று சென்னையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல், அப்போது முதலமைச்சரின் வாகனம் நெரிசலில் சிக்கியது போன்றவற்றுக்கு எ ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிதான் காரணம் என தாம்பரம் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஈசிஆரில்,  மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில், நேற்று (ஞாயிறு) ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி  நடைபெற்ற நிலையில், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், நேற்று ஈசிஆர் உள்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடுமையான வாகன நெரில் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் பல்வேறு விமர்சனங்களை கூறிய நிலையில், தாம்பரம் காவல்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்து கோடிக்கணக்கில் கல்லா கட்டிய நிர்வாகத்தினர்,  ரசிகர்களின் வருகை, அதையொட்டி, போக்குவரத்து குறித்து, முறையான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறருது. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால், கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் ரகுமான் நிகழ்ச்சி பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்குஅ இருந்ததாகவும், ரசிகர்கள் நிகழ்ச்சி வர எந்தவித ஏற்பாடுகளையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையாக செய்யவில்லை என்றும்,  இந்த விஷயத்தில் ஏ.ஆர்.ரகுமானின் நடவடிக்கை  மோசமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், இந்த நிகழ்ச்சி காரணமாக,  சென்னையில் நேற்று ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் 4மணி நேரம் வரை நீடித்தது. இதனால், அவசர பணிக்கு பலர் செல்ல முடியாத நிலையில், பல்வேறு பகுதிகளில் ஆம்புலன்சுகளும் வாகன நெரிசலில் சிக்கின. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என சமூக வலைதளங்களில் கடுமையாக சாடப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், இதுதோடர்பாககாவல் ஆணையரகம்  விளக்கம் அளித்துள்ளது.அதில்,  சென்னையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையை நிகழ்ச்சியே காரணம் என்றும், நிகழ்ச்சி எற்பட்டாளர்கள் முறையான வசதி செய்யாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரிக்கு வரும் ரசிகர்களுக்கு கார் பார்க்கிங் உள்பட பல்வேறு வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் முறையாக செய்யவில்லை என்று குற்றம் சாட்டி உள்ள காவல்துறை, முதலமைச்சரின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதற்கும், ஏ.ஆர். ரகுமான் நிகழ்ச்சியே காரணம் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும்,  நேற்றைய நிகழ்ச்சி காரணம்க ஏற்பட்ட வாகன நெரிசல், கூட்ட நெரிசல் உள்பட பல்வேறு குளறுபடிகள் குறித்து விரைவில் விரிவான விசாரணை  இருப்பதாகவும்,  தாம்பரம் காவல் ஆணையரகம் உறுதி செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் பிரமாண்டமான  முறையில் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற அனுமதி அளித்த காவல்துறை, அவர்கள் முறையாக  நிகழ்ச்சி தொடர்பான  வசதிகளை செய்துள்ளார்களா, வாகன நிறுத்தம் உள்பட போக்குவரத்து தொடர்பாக எந்தவொரு ஆய்வும் நடத்தாமல், ஏனோதானோ என செயல்பட்டதால்தான் முதலமைச்சர் ஸ்டாலின் வாகனம் உள்பட பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

உண்மை நிலவரம் இதுதான்பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், இதற்கு மாறாக, சென்னையில் நேற்று நிகழ்ந்த போக்குவரத்து நெரிசலுக்கு, ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்தான காரணம் என அவர்கள்மீது பழியை சுமத்தி,  காவல்துறையினர் தப்பிக்க பார்க்கின்றனர். இந்த மாபெரும் நிகழ்ச்சி தொடர்பாக சில மாதங்களாகவே பல்வேறு அறிவிப்புகளும், பல ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட்கள் விற்பனை செய்து வந்ததும், உலகறிந்த நிலையில், தங்களது ஏதும் தெரியாததுபோல, காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளது  எந்த வகையில் நியாயம் என்பது தெரிய வில்லை.