சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை முன்கூட்டியே மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக,  ஏப்ரல் 6-ம் தேதியை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என்று  பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தேர்தல் வாக்குப்பதிவுக்கு பெரும் பாலான பள்ளிகள் உபயோகப்படுத்தப்படும் நிலையில்,  1 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப். 10-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

இந்தநிலையில்,  ஏப்ரல் 6-ம் தேதியை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்தலால் ஒருவாரம் முன்கூட்டியே பள்ளிகளின் வேலை நாள் முடிவதால் அதனை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.