2018 ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 4684 முதல் நிலை கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து இந்த சங்கங்களை நிர்வகிக்க செயல் அலுவலர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

அதிகப்பட்சம் ஆறு மாத காலம் பதவியில் இருக்கும் இந்த செயல் ஆட்சியர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை அதற்குள் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து இறந்து போன வாக்காளர்கள் பெயர்களை நீக்கி புதிதாக தேர்தல் நடத்தவேண்டும் என்று ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை அடுத்து இந்த சங்கங்களுக்கான தேர்தலை நடத்த முடியவில்லை.

தவிர 2,3 மற்றும் நான்காம் நிலையில் உள்ள 13,784 கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ளது.