ஏப்ரல் 1 முதல் தமிழக அரசின் அனைத்து துறைகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-டெண்டர் மூலம் வாங்குவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இ-டெண்டர் முறைக்கு மாறியுள்ளதை அடுத்து ஏப்ரல் 1 ம் தேதிக்கு முன் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டவை மட்டுமே பழைய நடைமுறையில் பின்பற்றப்படும்.

ஏப்ரல் 1 க்குப் பிறகு கோரப்படும் ஒப்பந்தப் புள்ளிகள் எதுவும் பழைய நடைமுறை பின்பற்றப்படமாட்டாது மீறினால் அவை தகுதிநீக்கம் செய்யப்பட்ட டெண்டர்களாக கூறப்படுகிறது.

மாநில அரசின் அனைத்து துறைகளின் திட்டங்கள் மற்றும் துறைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை இனி இ-டெண்டர் மூலமே பெறமுடியும் முன் வைப்பு தொகை மற்றும் வங்கி உத்திரவாதம் மற்றும் பண பரிமாற்றம் போன்ற தரவுகளும் இந்த இ-டெண்டர்களில் இடம்பெறுவதை அடுத்து ஒப்பந்தங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுவதுடன் ஊழலை ஒழிக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.