மியூசிக் ஆல்பங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் சினிமா பாடல்களை தாண்டி பிரபலமாக இருக்கும். அப்படி ஒரு மியூசிக் ஆல்பம் தான் ஹே சிங்காரி.
அருள்ராஜ் இசையமைத்த இந்த பாடலை இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் பாடியுள்ளார். மைக்செட் ஸ்ரீராம், அபூர்வா ராவ், அனன்யா ராவ் உள்ளிட்டோர் இந்த மியூசிக் வீடியோவில் தோன்றி பிரபலமாக மாறினர்.
இந்த பாடலில் நடித்துள்ள அபூர்வா இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பவர் அபூர்வா,தனக்கு விரைவில் அஜய் என்பவருடன் திருமணமாகவுள்ளதை சமீபத்தில் அறிவித்தார். கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இவருக்கும் அஜய்க்கும் திருமணம் நடைபெற்றுள்ளது , இதுகுறித்த வீடீயோவை அவரது தங்கை அனன்யா பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது கணவர் அஜயுடன் ரொமான்டிக் லிப்லாக் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அபூர்வா,இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.