டில்லி: பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் பாஜவினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பல பகுதிகளில் கோரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில்,  6 மணி நேரத்தில் 1கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி ஒன்றரை கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாள்  இன்று (செப்.,17) நாடு முழுவதும் ர் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் மேற்கொண்டனர். மெரினாக கடற்கரையை சுத்தம் செய்தனனர். இதுமட்டுமின்றி  பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்லை எட்ட வேண்டும் என்று பா.ஜ. திட்டமிட்டு அதற்கான நடவடிகைகளை மேற்கொண்டனது.
அதன்படி, இந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கு  சேவா சமர்பன் அபியான் எனப் பெயரிடப்பட்டு, இன்று இன்று முதல்(செப்டம்பர் 17 )  அக்டோபர் 7 வரை செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின்படி, இன்று நாடு முழுவதும் இன்று தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி அடுத்த  6 மணிநேரத்தில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மதியம் 1:30 மணி நிலவரப்படி, இன்று ஒரே நாளில் அதுவும் 6 மணி நேரத்தில்  1 கோடியே 71 ஆயிரத்து 776 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் தினசரி கோவிட் தடுப்பூசி நான்காவது முறையாக 10 மில்லியனை கடந்துள்ளது.
மதியம் 3மணி நிலவரப்படி ஒன்றரை கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுஉள்ளது. இன்றைய தினத்திற்குள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.