சண்டிகர்: ஹரியானாவின் பிஜிஐ மருத்துவமனையின் அலட்சியத்தால், கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 400 பேர், தங்களின் பார்வையை பறிகொடுக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் ரோதக் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களில் 37 பேர், கடுமையான கண் வலி காரணமாக மீண்டும் அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, அறுவை சிகிச்சைக்குப் பின்னர், கண்களில் சீல் வடிந்துள்ளது.

இதற்கு காரணம், கண் அறுவை சிகிச்சைக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ அவர்கள் எடுத்துக்கொண்ட மருந்தாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மருத்துவமனை வரலாற்றிலேயே இப்போதுதான் கண் தொற்று தொடர்பாக, இப்படியான நிகழ்வு நேர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், மொத்தமாக பாதிக்கப்பட்ட 400 நபர்களும், தங்களின் கண்பார்வையை இழக்க நேரிடலாம் என கூறப்பட்டுள்ளதுதான். மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம் என அறியப்படுகிறது.

– மதுரை மாயாண்டி