சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி ராஜினாமா செய்துள்ள நிலையில், தலைமை நீதிபதி பணியிடம் கடந்த ஒரு மாதமாக காலியாக இருந்து வந்தது.

இந்த நிலையில்,   பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹியை (Amreshwar Pratap Sahi) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  உச்சநீதிமன்ற கொலீஜியம் மாற்றியுள்ளது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலாயா உயர்நீதி மன்றத்துக்கு பணி மாற்றம் செய்து கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கொலிஜியம் அறிவித்தது. அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு தஹில் ரமணி கடிதம் அனுப்பினார். அவர் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்துக்கு தற்போது புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டு உள்ளார்.