சென்னை: தடுப்பூசி போட மாணவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, உயிர் மேல் ஆசை இல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

இன்று, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள்,  கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இநத்  நிலையில் சென்னை  லயோலா கல்லூரியில் பேராசிரியர்,மாணவர்கள் மற்றும் இதர கல்லூரி பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்ததுடன், வகுப்பறைக்குள் சென்று மாணாக்கர்களிடம் உரையாடினார்.

அப்போது, மாணவர் ஒருவர், அவரிடம்,  தடுப்பூசிகள் போட மாணவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாள் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், உயிர் மேல் ஆசை இல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா என எதிர்க்கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ள மாணாக்கர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை. தொடர்ந்து கல்லூரியில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர். சென்னையில் மாநில சுகாதாரத்துறையும் மாநகராட்சியும் இணைந்து 122 கல்லூரிகளில் தடுப்பூசி போடும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைத்து, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இன்று வகுப்புக்கு வரும் மாணவர்கள் தடுப்பூசி போடாவிட்டால், அவர்களுக்கு கல்லுரியிலேயே தடுப்பூசி போடும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. லயோலா கல்லூரியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வகுப்பறைகள் செயல்பட தொடங்கி உள்ளது என்றவர்,  தமிழகத்தில் மொத்தமுள்ள  19 லட்சம் மாணவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என கல்லூரி நிர்வாகம் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.