ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் இயக்குநர் கவுதமனுக்கு முன்ஜாமீன் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மறுத்துள்ளது.

கடந்த மே 19ம் தேதி, கதிரா மங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக திரைப்பட இயக்குநர் கவுதமன் போராட்டம் நடத்தினார். இது குறித்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரைக்கிளையில் மனுத்தாகல் செய்தார். ஆனால் தற்போது விடுமுறை நீதிமன்றமாக செயல்படுவதால் முன்ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.