சென்னை: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சென்னையில் ஒருவர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டடத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே பலர் தங்களது பணம், நகைகளை பலர் இழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் கடனாளியாகவும், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியும் பலர் தற்கொலை முடிவுகளை நாடுகின்றனர். இந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான நபர், வாழ வழியின்றி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சோக சம்பவம் கோயம்பேட்டில் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியில் பிரவுசிங் சென்டர் நடத்தி வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க இளைஙர் ஒருவர், ஆன்லைன் ரம்மியால் ஈர்க்கப்பட்டு, தன்னிடம் உள்ள பணம், நகைகளை இழந்து பல லட்சம் கடன்பட்ட நிலையில், . கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் வேழிவழியின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவை தினேஷ் திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, அறையில் உள்ள பேனில் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகாக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.