திருச்சி: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று  மேலும் ஒரு பலி ஏற்பட்டுள்ளது. திருச்சியில்  கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மணப்பாறையில், ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த சந்தோஷ் என்ற வாலிபர் ஒருவர், ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம், ஆன்லைன் ரம்பி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்தோஷ் என்ற அந்த இளைஞர், தற்கொலை செய்வதற்கு முன்னர் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில், தனது தற்கொலைக்கு ஆன்லைன் ரம்மி தான் காரணம் எனவும், அதற்கு அடிமையாகி அதிகளவு பணம் இழந்துவிட்டதாகவும்  பதிவிட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட சந்தோஷ், கல்லூரியில் படித்து வருவதும், 6 மாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

[youtube-feed feed=1]