சென்னை: டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்முடியைப் போல மேலும் 11 அமைச்சர்கள் உள்ளதாகவும், அவர்களது வழக்குகளிலும் விரைவில் தீர்ப்புகள் வரும் என்று நம்புவதாக  தெரிவித்தார்.

பொன்முடி, துரை முருகன், கேன்.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம். ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, கே.ஆர்.பெரிய கருப்பன், அன்பரசன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் அமைச்சர்கள், பிரபலங்கள் மீதான நூற்றுக்கணக்கான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது. மேலும் பல வழக்களில் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஓபிஎஸ், வளர்மதி என பலரது வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகளில் பொன்முடி வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால், அவர் பதவி இழந்துள்ளார். இது திமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த  நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளளை  அண்ணாமலையில் செய்தியாளர்கள் பொன்முடி வழக்கின் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறியவர், “ 65 % வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்றம் சரிபார்த்து , பொன்முடிக்கு தண்டனை வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழக பா.ஜ.க வரவேற்கிறது என்றார்.

 டி.எம்.கே பைல்ஸ் பார்ட் 1-ல் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பெயர்கள் கூட இந்த தீர்ப்பில் உள்ளது என சுட்டிக்காட்டியவர்,  பொன்முடியின் இன்னொரு வழக்கின் தீர்ப்பு கூட விரைவாக வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசியவர், திமுக அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள் மீது, நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் உள்ளன. அந்த வகையில் பொன்முடி, துரை முருகன், கேன்.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம். ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, கே.ஆர்.பெரிய கருப்பன், அன்பரசன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான வழக்கு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.

பொன்முடிக்கு வழங்கப்பட்டதே காலம் கடந்த தீர்ப்பு. எனவே வேகமாக மற்ற வழக்குகளுக்கும் தீர்ப்புகள் வர வேண்டும் என விரும்புகிறோம் என்றவர், ஒருவர் புழல் சிறையில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இன்னொரு அமைச்சரின் மீது தீர்ப்பு வந்து அவர் பதவி இழக்கிறார். அடுத்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு வழக்கின் தீர்ப்புகளையும் எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள் என்றார்.

 எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நிதிஷ்குமார், இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று பேசியதும், அதை கேட்டுக்கொண்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது  தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,

இந்தியா கூட்டணி கூட்டத்தில், நிதிஷ்குமார் இந்தியில் பேசியபோது, மொழிபெயர்ப்பு வேண்டும் என டி.ஆர்.பாலு கேட்டுள்ளார். அப்போது நிதிஷ் குமார் மொழிபெயர்ப்புக்கு அனுமதிக்கவில்லை. மாறாக முதல்வர் ஸ்டாலினுக்கும், டி,ஆர்.பாலுவுக்கும் கிழக்கிந்திய கம்பெனி, மெக்காலே கவ்லித்திட்டம், ஆங்கில திணிப்பு எப்படி நடந்து என்பது குறித்து பாடம் எடுத்து அனுப்பி உள்ளார்.

அதைக்கேட்டுக்கொண்டு,  அவர்கள் அமைதியாக வந்து இங்கு உட்காந்திருக்கிறார்கள். தி.மு.க.வால் இந்தியா கூட்டணி உடையும். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தி.மு.கதான் காரணமாக இருக்கிறது.

இவ்வாறு கூறினார்.