‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனை புரிந்துள்ளது.

நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இதனிடையே, வெளிநாட்டில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளது ‘அண்ணாத்த’.