சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக, வாக்குப்பதிவு நாளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வை தள்ளி வைத்து அதற்கான தேர்வு பட்டியலை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்j நிலையில், ஏற்கனவே கல்லூரி மற்றும் பொறியியல் தேர்வுகளின் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி 19-ல் நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை மார்ச் மாதத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியுள்ளது. வாக்குப்பதிவு நாளான பிப்.19இல் நடைபெறவிருந்த தேர்வுகள் மார்ச் 5, 6, 9 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.