சென்னை:  மிச்சாங் புயல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகளுக்கு புதிய தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் தொடர்பாக புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும்  எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது

. இதன்படி பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.